உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மாமன்னன் படக்குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் நாயகனாக நடித்துள்ள மாமன்னன் படத்தின் குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் பேசும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், உதயநிதி ஸ்டாலினுடனும் மாரி செல்வராஜ் உடனும் நான் பண்ணும் முதல் படம் மாமன்னன். மாரி செல்வராஜ் உடன் பணியாற்றுவது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அவருடைய ஸ்டைலும், எண்ணங்களும் வித்தியாசமாக உள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, நல்ல உடல்நலத்தோடும், சந்தோஷத்தோடும் நீடூழி வாழ்க” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஹன்சிகா... குடித்துவிட்டு தோழிகளுடன் அலப்பறை செய்யும் வீடியோ வைரல்

Scroll to load tweet…

அந்த வீடியோவின் இறுதியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கையில் வாளுடன் நிற்கும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் மாரிசெல்வராஜ், உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, ஏ.ஆர்.ரகுமானின் பணிவான வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

அதேபோல் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், ஷூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மாமன்னன் சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களுடன் பணியாற்றியது கூடுதல் ஸ்பெஷல். அனைவரோடு படத்தை பார்ப்பதோடு, மேக்கிங் வீடியோவை காணவும் ஆவலோடு இருக்கிறேன். செட்டில் உள்ள அனைவரையும் தினமும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியுடனும் வைத்திருந்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... காதலே காதலே தனிப்பெரும் துணையே..! காதல் மனைவி ஷாலினியுடன் வெளிநாட்டில் ரொமான்ஸ் செய்யும் அஜித் - வைரல் Photo