Lyricist and Poet Vairamuthu Mother Passed Away : கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில் இன்று மாலை அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
Lyricist and Poet Vairamuthu Mother Passed Away : சாகித்ய அகாடமி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, சாதனா சம்மான் விருது, 7 தேசிய விருது என்று ஏராளமான விருதுகளை வென்று குவித்தவர் கவிஞர் வைரமுத்து. பேனாவை பிடித்து இவர் எழுதும் கவிதைகளும், பேசும் வார்த்தைகளும் ஏராளமான கவிதைகளை உருவாக்கி கொடுத்துள்ளது. சினிமாவில் கிட்டத்தட்ட 7000க்கும் அதிகமான பாடல் வரிகள் எழுதி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான் கவிஞர் வைரமுத்துவின் தாயாரான அங்கம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன்.
அவரது இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் இன்று ஞாயிறு மாலை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் தாயார் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கவிப்பேரரசு வைரமுத்து தாயார் அங்கம்மாள் மறைந்ததை அறிந்து நான் வேதனை அடைந்தேன். தமிழையும், அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து வாடும் வைரமுத்துவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
வைரமுத்துவின் தாயார் மறைவிற்கு அரசியல் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

