நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வானில் இருள்’ பாடலை தீ பாடியுள்ள பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் வானில் இருள் எனத் தொடங்கும் பாடலை நிஜத்தில் தீ என்கிற பெயரைக் கொண்ட பாடகி பாடி இருப்பது செண்டிமெண்டாகப் பார்க்கப்படுகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்துள்ள இந்தப் படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படம் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள வானில் இருள் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில், உமாதேவி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடகி தீ பாடியுள்ளார். இந்தப் பாடல் மூலம் நடிகர் அஜித்குமார் படத்துக்காக முதன் முதலான பாடல் வரிகளை உமாதேவி எழுதியுள்ளார்.

 

சிட்னியில் இருந்து வந்த ஐயராத்து மாமி தீ தான் வானில் இருள் பாடலை பாடியவர். பீட்சா -2 வில் பாடகியாக அறிமுகமாகி, வில்லா படத்திலும் பாடியுள்ளார். அடுத்து குக்கூ படத்திலும், மெட்ராஸ் படத்தில் ’நான் நீ’ பாடலையும் பாடியுள்ளார். இறுதி சுற்று படத்தில் ’ஏய் சண்டக்காரா..’ பாடலையும்,,  ’உசுரு நரம்புல’ பாடலையும் பாடியுள்ளார். காலா, வடசென்னை, மாரி -2 படத்தில் ‘ரவுடிபேபி’ பாடலை பாடியவர் இவரே. சூரரை போற்று படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் பாடி இருக்கிறார்.