மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தயாரிக்க இருப்பதாக மும்பையின் ரிலையன்ஸ் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் அப்படத்தை  லைகா நிறுவனம் தயாரிப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து படம் எடுக்கவிருக்கிறார் மணிரத்னம்.அப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ்,சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அப்படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சரித்திரப்பின்னணி கொண்ட படம் என்பதால் இந்தப்படத்தின். பட்ஜெட், இதுவரை மணிரத்னம் இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட் ஒண்ட படமாகும். அதாவது பட்ஜெட் சுமார் 350 கோடி என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளரை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த இரு சந்திப்புகளுக்குப் பிறகு லைகா நிறுவனமே இப்படத்தை தயாரிப்பது உறுதியானது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியிருக்கிறதாம். அதற்காக இலண்டனில் இருந்து லைகா நிறுவனர் சுபாஷ்கரன் பறந்து வந்துள்ளார். அவரும் மணிரத்னமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்களாம்.இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.