முன்பு தன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை வலதளங்களில் வெளியிடப்போவதாக தனது முன்னாள் காதலர் மிரட்டுவதாக துணை நடிகை ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.கோலிவுட் வட்டாரத்தில் இச்செய்தி பரபரப்பாகியுள்ளது.

வடபழனி ஆற்காடு சாலையில் வசித்துவருபவர் ஜெனிபர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக உள்ளார். இவர் வடபழனி போலீசில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் தன்னிடம் அறிமுகமாகி, தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும் என்னைக் காதலிப்பதாகவும் கூறினார். அவரை நம்பி சேர்ந்து வாழத் தொடங்கினேன். அப்போது நாங்கள் நெருக்கமாக இருந்த சமயங்களிலெல்லாம் என் சொல்லையும் மீறி வீடியோ எடுத்தார்.

பின்னர் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பிறகு அந்த வீடியோக்களைக் காட்டி தொடர்ந்து என்னை மிரட்ட ஆரம்பித்தார். இது தொடர்பாக ஏற்கனவே பக்ருதீன் மீது திருவல்லிக்கேணி, புழல் போலீசில் புகார் செய்து இருந்தேன். அப்போது அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி இருந்தனர்.

தற்போது மீண்டும் பக்ருதீன் பழைய வீடியோ காட்சிகளை காட்டி பணம் கேட்டு மிரட்டுகிறார். நேற்று என் வீட்டிற்கு வந்த பக்ருதீன் எனது தாயை கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு சென்றார். பக்ருதீன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் ஜெனிபர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பக்ருதின் மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.