தமிழ் சினிமாவில் நாயகனாகவும், துணை நடிகர், வில்லன் என எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து ஏற்று நடிப்பவர்கள் ஒரு சிலரே, அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர்.

ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக அசால்ட் பண்ணியிருந்தார்.  இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக வதந்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.

ஆனால் அவை உண்மை இல்லை, நாங்கள் மகிழ்ச்சியாக தான் உள்ளோம் என ரேஷ்மியும் பாபி சிம்ஹாவும் விளக்கம் அளித்து இருந்தனர், தற்போது ரேஷ்மி மேனனும் அவரது பெண் குழந்தை முத்ரா சிம்ஹாவும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் குழந்தை கியூட்டாக உள்ளது என முகநூல் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.