கப்பலேறி போன மாடல் அழகியின் மானம்..! 

மாடல் அழகியான மீரா மிதுன் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சென்னையை சேர்ந்த மாடல் அழகியான தமிழ் செல்வி என்ற பெயர் கொண்ட மீரா மிதுன் இதற்கு முன்னதாக மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட 6 அழகி பட்டத்தை தட்டிச் சென்றவர்.
,
இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார், இதற்கிடையில் இவர் சுயமாக தமிழ்நாடு டைவா என்ற பெயரில் அழகிப் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்காக அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பல மாடல்களை தேர்வு செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் நடத்தவிருந்த அழகிப் போட்டி நிகழ்ச்சியை நடத்த விடாமல் ஜோ மைக்கேல் மற்றும் அஜித் ரவி என்பவர் தடுத்து நிறுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து அவர்கள் தங்களை தொடர்ந்து மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார். இதன்பின் மீரா மிதுனிடமிருந்து அழகி போட்டிக்கான பட்டத்தை கைப்பற்றப்பட்டது.

மேலும் மாடல் அழகியான நிருபா என்ற பெண் அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நுழைவு கட்டணமாக 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பல்வேறு நபர்களிடம் வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்திவரும் மிஸ் தமிழ்நாடு அமைப்பின் லோகோவை கூட இவர் தவறுதலாக பயன்படுத்தி மாடல்களை தேர்வு செய்து வந்ததாகவும் அதன் மூலம் பல்லாயிரக் கணக்கில் பணம் பறித்ததாகவும் நிருபா தெரிவித்து உள்ளார்.

இது மேலும் மீரா மிதுனிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவல் இப்போதே கிளம்பி உள்ளது.மேலும் மீராவுக்கும், இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிருபா மற்றும் ஜோ இடையே கடந்த சில மாதங்களாக தொழில் ரீதியான போட்டி அதிகரித்து வந்ததால் தான் இந்த பிரச்சனை எனவும் கூறப்படுகிறது.

இதனால் இதனை முடக்கவே ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குறைகூறி கொள்வதாகவும் மற்றொரு பக்கம் தகவல் கசிந்த வண்ணம் உள்ளது.