பிக் பாஸ் சீசன் 3 இல், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் இலங்கையிலிருந்து வருகை புரிந்துள்ள செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவிற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது.

சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆதரவாக விஜய் ரசிகர்களே பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இவருடைய குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சற்று அமைதியாகவும் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருந்து வருகிறார் இவர். 

எனவே பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 3 நாட்களே ஆன நிலையில் தற்போது வரை இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. மற்ற போட்டியாளர்களான வனிதா, அபிராமி, சாக்ஷி இவர்கள் தனித்து செயல்பட்டு வருவதால் எப்போதும் ஒரு பரபரப்பு நிலவுகிறது. இவர்களுக்கு இடையில் ஒரு தனிப் பாதையில் செல்கிறார் மீரா மிதுன்.

பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுனுக்கு எதிராக அனைத்து பெண்களுமே செயல்படுகின்றனர் என்றே கூறலாம். ஆனால் பாத்திமா பாபு சற்று ஆதரவாக உள்ளார். இப்படியே சென்றால் அடுத்தடுத்து என்னென்ன விளைவுகள் சண்டை வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.