பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான ஓரிரு வாரங்களில் கவினை அண்ணன் என அழைத்த லாஸ்லியா, தற்போது கவினை காதலிப்பது போல் நடந்து கொள்கிறார். கவினுடன் தான் இவர் அதிகமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. 

சாக்ஷி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், இவர்களுடைய நெருக்கம் சற்று அதிகமாக உள்ளதை, கடந்த இரு வாரங்களாகவே பார்க்க முடிகிறது. நேற்றைய தினம் கூட கவின் பேசும் போது லாஸ்லியா வெட்கப்பட்டு சிரித்தது, லாஸ்லியாவின் ரசிகர்களை கடுப்பேற்றும் விதமாக இருந்தது.

மேலும் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கூட, முன்பு தனக்கு கவினை பிடிக்கும் இப்போது மிகவும் பிடித்திருக்கிறது என மறைமுகமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், லாஸ்லியாவிடம் சேரன் தனியாக அமர்ந்து பேசும் காட்சி காட்டபடுகிறது. அப்போது " தப்போ... சரியோ... தனக்காக கவின் நிறைய விஷயங்களில் நின்றிருக்கிறான் என கூறுகிறார் லாஸ்.  இதற்கு சேரன் முன்பைவிட கவினிடம்,  ரொம்ப நெருக்கமா பழகுற என தெரிவிக்கிறார்.

இதற்கு லாஸ்லியா, முன்பு எனக்கு கவினை பிடிக்கும் இப்போது ரொம்ப பிடிச்சிருக்கு, என தன்னுடைய மனதில் உள்ளதை சேரனிடம் கூறுகிறார். அவனும் தன்னை பிடித்திருக்கிறது என கூறுகிறான்.  இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது, எனக்கு தேவை இல்லை. எனக்காக கவி ஸ்டாண்ட் பண்ணுகிறான், அதனால் நானும் ஸ்டாண்டர்ட்  பண்ணுறன். மற்றபடி எதுவாக இருந்தாலும் இங்கிருந்து வெளியே சென்ற பிறகு தான் என கூறுகிறார் லாஸ்லியா. 

இவருடைய பேச்சில் இருந்து கவினை லாஸ்லியா காதலிப்பது தெளிவாக தெரிகிறது.

அந்த ப்ரோமோ இதோ: