பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் காதல் பறவைகளான, லாஸ்லியா மற்றும் கவின் வெளியில் வந்ததில் இருந்து யாரோ போல் தான் இருக்கிறார்கள். அதே வேளையில், கடந்த சில தினங்களுக்கு முன், கவின் போலவே போஸ் கொடுத்து அவரை விமர்சிக்கும் தொனியில் இவர் போட்ட பதிவு கவின் - லாஸ்லியா ஆர்மி மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் லாஸ்லியா.

உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்.

ஆனால் இவர்களுடைய ஆர்மியை சேர்ந்தவர்களோ, விடா பிடியாக, 'கவிலியா' என்கிற பெயரில் இருவரும் இணைந்திருப்பது போல பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஒரு சில பேட்டிகளில் காதல் குறித்து பேச்சு எழுப்பிய போது, கவின் இப்போது தனக்கு நிறைய கடமைகள் உள்ளது என்றும், பின்பு தான் என்னுடைய வாழ்க்கை பற்றி சிந்திக்க முடியும் என தெரிவித்தார். அதே போல், லாஸ்லியா இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பல, பேட்டிகளை தவிர்த்து விட்டார்.

தற்போது இருவருமே, அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் பிஸியாகி உள்ளனர் என்பது நாம் அறிந்தது தான்.  

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், கவின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கண்ணாடி முன் நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அதில் ’எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்போதாவது உதவும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இவர் இந்த பதிவை போட்ட,  அடுத்த சில நிமிடங்களில் லாஸ்லியா இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதே போல் கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து,  ’வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை கண்ணாடியில் பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Life is trying to teach you something so accept your mistakes & see yourself in the mirror 🙂

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on May 10, 2020 at 5:49am PDT

 

எனவே இந்த கருத்தின் மூலம் லாஸ்லியா, மறைமுகமாக கவினை விளாசியுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத லாஸ்லியா கவின் பற்றி பேசியதால் கடுப்பாகி, இப்பொது இதுகுறித்து கோவமாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "இது என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம், நான் போடுகிற வார்த்தைகள், புகைப்படங்கள் எல்லாமே என்னை பற்றியது. பின்னால் சென்று யாரையும் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய தற்போதைய சூழ்நிலை பற்றி தான் பேசியதாகவும் அதனை நானே பார்த்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.