*டைரக்டர் ஷங்கரின் வேறு எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு ‘இந்தியன் 2’ படத்துக்கு துவக்கத்தில் இருந்தே பெரும் சிக்கல்கள். டிராப் லெவலுக்கு போய் மீண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது ஜரூராக போய்க் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் இப்படத்தின் முக்கிய நடிகையான காஜல் அகர்வால், படத்தின் முக்கியத்துவம் பற்றி அடிக்கடி ரகசியங்களை லீக் செய்கிறார். இந்தப் படத்தில் தனக்கு 80 வயது பாட்டி வேடம்! என்று சர்ப்பரைஸை போட்டு உடைத்தார். அதன் பின் இப்படத்துக்கான மேக் - அப் சாதனங்களை போட்டோ எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஏற்றிவிட்டார். இப்படி காஜலின் அட்ராசிட்டி தொடர்வதால் படத்தின் ரகசியங்கள் வெளியே போவதாக கடுப்பான ஷங்கர், காஜலை அழைத்து ’சைலண்டா இருங்க. புது நடிகைங்க கூட மெச்சூர்டா நடந்துக்குறாங்க. நீங்க என்னான்னா பேஸிக் விஷயங்கள் கூட தெரியாம நடந்துக்குறீங்க. இனி இப்படி பண்ணினா படத்துல உங்களுக்கு இடம் இருக்காது.’ என்று எச்சரித்துள்ளாராம். (சார், நீங்க பாட்டுக்கு அந்தம்மாவ படத்த விட்டு தூக்கிடாதீங்க. கடுப்புல வெளியில வந்து கதையை சொல்லிடப்போறாங்க)

*இந்திய சினிமா உலகில் அப்பா, மகள் நடிகர்களாக இருப்பதும் ஆங்காங்கே வழக்கத்தில் உள்ளது. திரைத்துறை சம்பந்தமான விழாக்களில் கலந்து கொள்ளும் இளம் நடிகைகள் இப்போதெல்லாம் ஓவர் தாராளமாக வருகிறார்கள். ஆனால் அந்த விழாவுக்கு அப்பாவும் வருகிறார் என்றால் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றனர். இந்த நிலையில் தனது ‘மலாங்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனில்கபூர் வந்தபோது அவரது மகள் சோனம் கபூரும் வந்திருந்தார். சோனத்தின் உடை படு மோசமாக இருந்ததாகவும், அப்படியொரு உடையுடன் அப்பாவுடன் இணைந்து அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர். (இந்த நேரத்துல, உலகநாயகனோடு அவரது மகள் மிக மிக மோசமான ஆடையில் கொடுத்த அந்த போஸ்! உங்களது நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)

*சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அவருடைய கெட்-அப் ஒன்று லீக் ஆகியுள்ளது. ஷூட்டிங் சமயத்தில் விக், முகத்தில் மேக் - அப் சகிதமாக யாரோ ரஜினி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இது சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. வழக்கம்போல் ரஜினி இதற்காக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இயக்குநர் சிறுத்தை சிவாதான் தாறுமாறாக கோபமாகிவிட்டாராம். (விடுங்க பாஸு! ரஜினியோட  உங்க பட கெட்-அப்!க்கும் பேட்ட, தர்பார் கெட்டப்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை. கூலா! பழைய போட்டோன்னு சொல்லிக்கலாம்)

* நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல  மியூஸியத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை முன் நின்று பந்தாவாக போஸெல்லாம் கொடுத்து இன்ஸ்டா பண்ணிவிட்டார் காஜல். இந்த நிலையில் ‘அப்படி என்னத்த காஜல் சாதிச்சுட்டார்னு இப்போ அவருக்கு சிலை வெச்சீங்க?’ என்று மற்ற பிரபல நடிகைகள் அந்த சிலை அமைப்பு நிர்வாகத்தை பார்த்து கொதித்துள்ளனர். இது காஜல்  தரப்புக்கு தெரியவர, கண் கலங்கிவிட்டார்களாம். (நல்ல வேளை இதே உண்மை கேள்வியை மகேஸ்பாபு, பிரபாஸுக்கு சிலை வைக்கிறப்ப யாரும் கேட்கல! எகிரி எகிறி மிதிச்சிருப்பாங்க)

*பிக்பாஸ் சீசன் 3 நடந்து கொண்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த இலங்கைப் பொண்ணு ‘லாஸ்லியா’வுக்கு செம்ம கிரேஸ். அந்த நேரத்தில் தமிழ்பட நடிகைகளை விட லாஸுக்குதான் ஏக கிராக்கி. இதை மனதில் வைத்து சினிமா மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பெரிதாய் கால் ஊன்றிட நினைக்கிறார் அவர். ஆனால் லாஸ்லியா வந்தால் தேவையில்லாம நமக்கு சிக்கலாகும் என்பதால் தமிழில் வலம் வரும் முக்கிய நடிகைகள் சிண்டிகேட் போட்டு லாஸ்லியாவின் கைகளுக்கு முக்கிய படங்கள் எதுவும் போய்விடாமல் சினிமா மேனேஜர்கள் மூலம் தடுக்கின்றனராம்.  (லாஸி, நீ வெப் சீரீஸ் பக்கமா வாடி தங்கம்)