பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பெரிதாக சண்டை சச்சரவு என எதிலும் தலை காட்டாமல் இருந்த லாஸ்லியா மெல்ல மெல்ல தன்னுடைய குரலை உயர்த்தி வருகிறார். இதனால் இவர் நடிக்கிறாரா என்கிற சந்தேகம் அவ்வப்போது பலருக்கு எழுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது ஒரு புறம் இருக்க, போட்டியாளர்கள், கடந்த சில நாட்களாக நடித்து வந்த கிராமத்து டாஸ்கில் சிறப்பாக நடித்தது யார் என்று பிக்பாஸ் எழுப்பும் கேள்விக்காக காத்திருக்கிறார்கள்.

காரணம் இதில் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்படும் மூன்று பேர், அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள். தற்போது தலைவராகும் ஆசை, கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு வந்துள்ளது நேற்று அவர்கள் பேசியதில் இருந்து இது தெரிகிறது.

கவினிடம் எப்போது, பிக்பாஸ் கிராமத்து டாஸ்கின் ரிசல்டை அறிவிப்பார் என லாஸ்லியா கேட்க, இதற்கு கவின் தானும் அதற்கு தான், காத்திருப்பதாக கூறுகிறார். பின் இந்த முறை தன்னுடைய பெயரை கூறு கவின். என லாஸ்லியா அவரிடம் கூறுகிறார். இதற்கு கவின் முடியாது என கூறியதும், எனக்காக இதை கூடவா செய்ய மாட்ட கவின் என கொஞ்சி கொஞ்சி கேட்டார். 

ஒருவேளை, இவர் இந்த முறை தலைவர் பதவியில் போட்டியிடுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.