பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. கவினுடன் ஏற்பட்ட காதலால் தமிழ் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானார். தற்போது சில படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நவம்பர் 15 ஆம் தேதி மரணமடைந்தார்.

கனடாவில் பணிபுரிந்து வந்த மரியநேசன் அங்கேயே மரணமடைந்துள்ள நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக அவருடைய உடலை இலங்கை கொண்டு வருவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் அதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, அங்கு வந்த மரியநேசன் மகள் லாஸ்லியா கவினை காதலிக்கும் விவகாரம் தெரிந்ததால் சற்றே கடினமாக நடந்து கொண்டார். இதனால் லாஸ்லியா அழுது, காலில் விழுந்து எல்லாம் மன்றாடிய பிறகே சற்றே கோபம் தணிந்து சமாதானம் ஆனார். அவர் பேசிய பேச்சுகள் கஷ்டப்பட்டாலும் கண்ணியமாக வாழ வேண்டும் என்பதை அறிவுரீதியவையாகவே இருந்தது.

இந்நிலையில் மரியநேசனின் திடீர் மரணம் லாஸ்லியா ரசிகர்களையும், அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலரும் லாஸ்லியாவை தொடர்பு கொண்டு தங்களுடைய ஆறுதலை தெரிவித்தனர். சிலர் லாஸ்லியாவுடன் சேர்ந்து இலங்கை செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரணத்தில் சில, சந்தேகங்கள் உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, லாஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கனடா அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், அவர் இயற்கையான முறையில் தான் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மரியநேசன் மரணம் குறித்து எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.