பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சி துவங்கப்பட்ட இரண்டே நாட்களில், லாஸ்லியாவின் அழகிய இலங்கை தமிழ் உச்சரிப்புக்காகவே இளைஞ்கர்கள் சிலர் இவருக்கு ஆர்மி துவங்கினர். அவர்கள் தற்போது வரை இவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

லாஸ்லியாவின் பேச்சையும் தாண்டி, இவர் பாடும் பாடல்களும், இவரின் டான்ஸையும் காண்பதற்காகவே, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருவதாகவும் சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதே போல் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான சேரனை பார்த்து, தன்னுடைய தந்தையும் பார்ப்பதற்கு, சேரன் மாதிரியே இருப்பர். அவரை பார்த்து யாரவது, நீங்க சேரன் மாதிரி இருக்கீங்க என்று சொன்னால் குஷி ஆடி விடுவார் என கூறினார். இவர் இப்படி சொன்னதில் இருந்து இயக்குனர் சேரனும், தன்னை அப்பா என்று கூப்பிடுமாறு கூறினார் இது ஏற்கனவே நாம் அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியாவின் தந்தை, தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கடந்த 10 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகளை பிரிந்து கனடாவில் வேலை செய்து வருகிறார். லாஸ்லியா கூட இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் தன்னுடைய தந்தையை பார்க்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி இருந்தார்.

இப்போது லாஸ்லியாவின் தந்தை புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரை பார்ப்பதற்கு அசப்பில் சேரன் மாதிரியே இருக்கிறார் என சில நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ..