முதல் டாஸ்க்:

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள்,  ஒவ்வொருவராக அவர்களுடைய வாழ்வில் நடந்த சோகங்களை, மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது முதல் டாஸ்காக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை, நடிகர் சரவணன், ரேஷ்மா, மதுமிதா, வனிதா, தர்ஷன் என அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர்.

லாஸ்லியாவின் சோகம்:

அந்த வகையில் லாஸ்லியா, இலங்கை தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களை பற்றி கூறுவார், என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் லாஸ்லியா அவருடைய வாழ்க்கையில் நடந்த சோகத்தை பற்றி கூறியுள்ளார்.

அக்கா தற்கொலை:

பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா, இதுகுறித்து பேசுகையில், என் குடும்பத்தில் "நான், அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள் உள்ளனர்.  தனக்கு ஒரு அக்கா இருந்தார். அவள் நல்ல நிறம், பார்க்க ரொம்ப அழகா இருப்பார்.  அவள் மிகவும் கோவக்காரி. ஸ்ரீலங்காவில் இருக்கும்போது நாட்டின் நிலையும் அப்போது சரி இல்லை. அவள் அடிக்கடி கொஞ்சம் டிஸ்ரப்  ஆகுற கேரக்டர்.

தன்னை யாருக்கும் பிடிக்கல என்று நினைப்பாள்.  ஒரு நாள் ஸ்கூல் முடிந்து அவர் வீட்டிற்கு வந்ததும், அனைவரும் இருந்தனர்.  தன்னுடைய அப்பா வேன் டிரைவர் என்பதால் அம்மாவிடம் பிள்ளைகளை பார்த்துக்கோ இரவு  ஒரு மாதிரி தோன்றியது, கவனமாக இருங்கள் என்று கூறிவிட்டு சென்றார். அம்மாவுக்கும், அக்காவுக்கும், இரண்டு நாட்களாக சிறு பிரச்சினை இருந்ததால் ஸ்கூல் விட்டு வந்தால் யூனிபார்ம் மாத்திட்டு மற்ற வேலையை பார்க்க வேண்டியது தானே என திட்டினார்.

இந்தக் கோபத்தில் தன்னுடைய அக்கா... தங்கையை போட்டு அடித்துவிட்டார். அப்போ தங்கை கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு வயிற்றில் கல் குத்தி ரத்தம் வந்தது. இதனால் வலியில் அவள் கத்த தொடங்கி விட்டாள். இதனால் அம்மாவும் கோபத்தில் தன்னுடைய அக்காவை கத்திவிட்டு தங்கையை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது நான் வெளியில் வந்து வாசலை கூட்டிக் கொண்டு இருந்தேன். அப்போது தனக்கும் ஏதோ தவறாக நடக்க போகிறது என்று தோன்றியது. சரி அக்காவை சமாதானப்படுத்த  நினைத்து தங்களுடைய வீட்டில் இருந்தது ஒரே ஒரு அறை தான்.  அந்த அறையின் கதவு சாத்தி இருந்தது. கதவை தட்டிப் பார்த்தும் அவள் திறக்கவில்லை.

அதனால் கொஞ்சம் வேகமாக கதவை திறந்து பார்த்தபோது தன்னுடைய அக்கா தங்கை தூங்க கட்டபட்டிருந்த தொட்டிலின் கயிற்றில், கழுத்தை சுற்றியபடி நின்று கொண்டிருந்தார்.  அதை பார்த்ததும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை அக்கா கன்னத்தை  தட்டி பார்த்தும், எழுந்திருக்கவில்லை. 

உடனே ரோட்டில் சென்ற ஒருவரை அழைத்து பார்த்தபோது தன்னுடைய அப்பாவிற்கு உடனடியாக கால் செய்து, இது குறித்து சொன்னார்.  அவர் சற்றும் அதை நம்பவே இல்லை, தன்னுடைய அம்மா திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இதுவரை தன்னை விட்டு நீங்காமல் உள்ளது.  இதை ஏன் சொல்கிறேன் என்றால் காதல் தோல்வி, அம்மா அப்பா திட்றாங்க, என தற்கொலை யாரும் செய்து கொள்ளாதீர்கள்.  அப்படித் தற்கொலை செய்து கொண்டால் பெற்றோர் எந்த அளவிற்கு கவலை படுவார்கள் என்பது எனக்கு தெரியும் என தன்னுடைய வாழ்வில் நடந்த சோகமான கதையைக் கூறி போட்டியாளர்களை மட்டுமல்ல, ரசிகர்களையும் அழ வைத்துவிட்டார் லாஸ்லியா.