‘நான் தொடர்ந்து எச்சரித்தும் கேளாமல் மகள் என்று சொல்லிக்கொண்டே லாஸ்லியாவிடம் மிகவும் தவறான முறையில் நடந்துகொள்கிறார் இயக்குநர் சேரன்’என்று முதல் எலிமினேட்டராக வெளியே வந்துள்ள நடிகை ஃபாத்திமா பாபு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் சேரனைத் தேடியும் பிக்பாஸ் இல்லத்துக்கு போலிஸ் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டவர்  பாத்திமா பாபு.  பிக் பாஸ் போட்டியில்  மிகவும் பாசமானவராகப் பார்க்கப்பட்ட பாத்திமா பாபு, டிஆர்பியை உயர்த்த எந்த விதத்திலும் உபயோகப்படவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எலிமினேஷன் செய்யப்பட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பாத்திமா பாபு, வனிதாவை, இயக்குநர் சேரனை  கடுமையாக விமர்சித்தார்.

பிக்பாஸ் இல்லத்தைவிட்டு வெளியே வந்த நிலையில் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஃபாத்திமா பாபுவிடம் , வனிதா  பற்றி கேட்டபோது , 'திமிர்பிடித்தவள், முட்டாள் பெண். அவர் யார் சொல்லுறதையும் கேட்குற மனநிலையில் இல்லை. நான் பலமுறை முயற்சி செய்துள்ளேன். அவருடைய போக்கை அவர் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அவர் எதிர்பார்ப்பது கிடைக்காது. அப்படி இல்லையென்றால் அந்த கடவுளே  வந்தாலும் அவரை காப்பாற்ற முடியாது' என்றார்.

இதையடுத்து சேரன் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, 'உங்க பொண்ணாவே இருந்தாலும் லாஸ்லியாவை  ஃபிசிக்கலா  தொடாதீங்க சேரன்.  சொந்தப்பொண்ணாவே இருந்தாலும் இவ்ளோ தான் தொடணும்னு இருக்கு. கன்னத்தை  பிடிச்சு அழுத்தி தேய்கிறது  எனக்கு பிடிக்கல. நீங்க அப்பாவாவே பண்ணாலும் எனக்கு அதெல்லாம் பார்க்கவே சகிக்கல' என்று தொடர்ந்து சேரனை எச்சரித்ததாகவும் ஆனால் சேரன் தனது போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லை என்றும் ஃபாத்திமா பாபு குற்றம் சாட்டியுள்ளார். இந்த சப்ஜெக்டை முகநூல் பெண் போராளிகள் கையில் எடுத்தால் சேரனைக் கட்டுப்படுத்தலாம்.