பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமான போது, நடிகர் கவின், அபிராமி, சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா என நான்கு பெண்களை காதலித்ததாக சொல்லிக்கொண்டிருந்தார். முதல் இரண்டு வாரங்கள் இது காமெடியாக பார்க்கப்பட்டாலும், பின் அபிராமி உண்மையிலேயே காதலிப்பதாக கூறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் கவின், அவரை தோழியாக மட்டுமே பார்ப்பதாக தெரிவித்தார். இவரின் இந்த செயல் உண்மையிலேயே பலருடைய பாராட்டையும் பெற்றது. இதை தொடர்ந்து, சாக்ஷி மீது பொஸசிவாக இருந்தார். இருவரும் காதலிப்பது போலவே சில நடந்து கொண்டனர். அதே நேரத்தில் லாஸ்லியா மீதும் அன்பு காட்ட துவங்கினார். இது சாக்ஷிக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் பிக்பாஸ் வீட்டில் மிக பெரிய பிரச்சனையே வெடித்தது.

இந்நிலையில் கடந்த வாரத்திற்கு முந்தய வாரம், சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இது, தற்போது மீண்டும் லாஸ்லியா - கவின் காதல் ஆரம்பமாவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், கவின் -லாஸ்லியா காதல் மலர்வது போல் தெரிகிறது. இன்றைய அடுத்த புரமோவில் கவின் காதல் டயலாக் பேசுவதும் அதற்கு லாஸ்லியா வெட்கப்படுவதையும் பார்க்கும்போது இருவரும் உண்மையில் காதலிப்பதாகவே தெரிகிறது.

Scroll to load tweet…