பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒரு புதிய இளம் காதல் ஜோடி உருவாகி உள்ளது. இதே பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா ஒருதலையாக காதலித்த போது, அவருக்கு கிடைத்த வரவேற்பு, கவின் - லாஸ்லியா காதலிக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான்.

இந்நிலையில் நேற்றையதினம் , பிக்பாஸ் வீட்டில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக ப்ரோமோ மூலம் தெரிவித்திருந்தார் நடிகர் கமலஹாசன். குறிப்பிட்ட காட்சி வெளியானபோது, சரியாக யார் என்று அடையாளம் தெரியாவிட்டாலும், மக்கள் பலர், கமலிடம் தற்போது சிக்கியுள்ளது லாஸ்லியா - கவின் ஜோடி என சரியாக கணித்து கூறினர்.

இதுகுறித்து நேற்றைய தினம் கமல் பேசிய போது, அவர்களுடைய தனிப்பட்ட காதல் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் மிகவும் நாசுக்காக,...  இங்கு பேசமுடியாத விஷயம் என்றால் வெளியில் சென்றவுடன் பேசி கொள்ளலாமே என கூறினார். 

பின் ரசிகர்களும், மக்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த விதிமீறல் காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் லாஸ்லியா "நீ கோபப்பட்டால் நானும் கோப படுகிறேன், மூஞ்சை தூக்கி வைத்து கொள்கிறேன் என கூறுகிறார்'. இந்த உரையாடல் யாரும் இல்லாத இருட்டு அறையில் நடைபெறுகிறது. 

அப்போது திடீர் என கவின், தன்னுடைய மைக்கின் பேட்டரியை  கழற்றுகிறார். பின் இதே போல லாஸ்லியாவும் தன்னுடைய மைக் பேட்டரியை கழற்றி விட்டு, இருவரும் காதில் ஏதோ ரகசியமாக பேசுகிறார்கள். 

இந்த காட்சி இதோ: