இலங்கை செய்திவாசிப்பாளர் என்கிற அறிமுகத்தோடு, தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பலரது ஆதரவையும் பெற்றுள்ளனர் லாஸ்லியா.

நேற்றைய நிகழ்ச்சியில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் டாஸ்காக கொடுக்கப்பட்டுள்ள, தங்களை பாதித்த சோகங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற டாஸ்க்கின் படி, தன்னுடைய அம்மா திட்டியதால், தற்கொலை முடிவு எடுத்த அக்காவை பற்றியும், தனக்காகவும், தன்னுடைய தங்கைகளுக்காகவும் 10 வருடமாக கனடாவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் தந்தை பற்றி கூறினார்.

கடைசியாக இவர் எடுத்த சீட்டில், இதுவரை உங்களை பற்றி யாருக்கும் தெரியாத ஒன்றை கூற வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. இதற்கு மிகவும் கியூட்டாக, நான் யாரையாவது எனக்கு பிடித்திருந்தால், அவர்களை அவங்களுக்கே தெரியாமல் சைட் அடிப்பேன் என கூறி அனைவரையும் சிரிக்க வைத்து விட்டார்.