பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வருபவர், லாஸ்லியா. மற்ற பெண் போட்டியாளர்களை விட, அமைதியாக இருந்த படி அனைவருடைய கவனத்தையும் பெற்று வருகிறார்.

அதே போல், இவர் துரு துருவென்று இல்லை என, மிஸ்ச்சர் மாமி, என்பது போன்ற சில விமர்சனங்களும் எழுந்து வருகிறது. பிரபலங்கள் சிலர் கூட, கண்டிப்பாக இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை லாஸ்லியா பெற வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் லாஸ்லியா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அக்காவின் தற்கொலை பற்றி கூறி அனைவரையும் அழ வைத்த இவர், அதை தொடர்ந்து,  இவருடைய அப்பா பற்றி பேசினார்.

அப்போது, தன்னுடைய அப்பா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்காகவும், என்னுடைய தங்கைகளுக்காகவும் கன்னடாவில் கஷ்டப்படுகிறார். அவருக்கு பாசத்தை வெளிப்படுத்த தெரியாது. நான் அவரை பார்த்து 10 வருடம் ஆகிறது. அவரை மீண்டும் ஏப்போது பார்ப்பேன் என ஆசையாக உள்ளது. என்னுடைய ஆயில் காலத்தை கூட அவருக்கு கொடுத்து விடுவேன் அவர் இன்னும் நிறைய நாட்கள் வாழ வேண்டும் என ஆசை. அவர் பார்ப்பதற்கு, தற்போதைய பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சேரன் மாதிரியே இருப்பர்.

அவரை அப்படி யாரவது சொன்னால் அவர் குஷியாகி விடுவார். இதுவரை ஐ லவ் யு அப்பா என்று அவர் முன் நான் சொன்னதே இல்லை. இப்போது சொல்கிறேன் ஐ லவ் யு அப்பா உங்களை சீக்கிரம் பாக்கணும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என தன்னுடைய தந்தை மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தினார் லாஸ்லியா.