Look at the thalapathi Mersal film - Calling the actor in the film ...
தல அஜித்தின் விவேகம் படத்தில் நடித்த செர்ஜ் குரோசான் கேசினுக்கு மெர்சல் படத்தை பார்க்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
‘மெர்சல்’ படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், பாரீஸில் உள்ள ‘கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கமான கிராண்ட் ரெக்ஸில் மெர்சல் திரையிடப்பட உள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்று.
ரஜினியின் கபாலி, ராஜமௌலியின் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து 3-வது தமிழ் படமாக கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் மெர்சல் படம் திரையிடப்பட உள்ளது.
இவர், கேசினோ ராயல், 300: ரைஸ் ஆப் தி எம்பையர், தி டிரான்ஸ்போர்டர் ஆகிய ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் மேனாக பணியாற்றிய ஹாலிவுட்டின் ஸ்டண்ட் மேனும், அஜித்தின் விவேகம் படத்தில் நடித்தவருமான செர்ஜ் குரோசா கேசினுக்கு கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் மெர்சல் பிரீமியர் ஷோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
