தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து, கவர்ச்சியால் கிரங்கடித்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரேயா. குறிப்பாக கோலிவுட் திரையுலகில், நடிகை ஸ்ரேயா ரஜினிகாந்த், விஜய், சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

இவர் கடந்த ஆண்டு, ஆண்ட்ரி கோசீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, மாடலிங் மற்றும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்ரேயா, 'சண்டக்காரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மலையாளத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'மை பாஸ்' என்கிற படத்தின் ரீமேக்கிற்காக உருவாகி வருகிறது. 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக லண்டன் சென்ற ஸ்ரேயா, உயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ள, வெளி ஆட்கள் உள்ளே வர தடை செய்யப்பட்ட இடத்தின் உள்ளே திடீர் என நுழைந்தார்.

இதனால் திடீர் என நடிகை ஸ்ரேயாவை லண்டன் போலீசார் கைது செய்து, அவர் யார்? என்ன நோக்கத்தில் உள்ளே நுழைந்தார் என துருவி துருவி கேள்வி எழுப்ப துவங்கினார். இதனால் பயந்து போன ஸ்ரேயா, இந்த தகவலை படக்குழுவினரிடம் கூற, பின் அடித்து பிடித்து வந்த பட குழுவினர் போலீசாரிடம் இருந்து அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இந்த செய்து வெளியாக, உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள, வெளி ஆட்கள் உள்ளே நுழைய தடை போடப்பட்ட இடத்திற்குள் செல்ல கூடாது என்பது ஸ்ரேயாவிற்கு தெரியாத என சமூக வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.