நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாகவும், இவர் இத்தாலியை சேர்ந்த ' மைகேல் கோர்சலே' என்கிற லண்டன் நடிகரை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.

 இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்தியாவில் ஒன்றாக சுற்றி வருவதாகவும், அவருடன் தான் ஸ்ருதிஹாசன் இந்த வருட காதலர்தினத்தை கொண்டாடியுள்ளார் போன்ற பல செய்திகள் சமீபத்தில் இணையதளங்களில் வலம் வந்தது.

தற்போது இந்த செய்தி குறித்து விளக்கமளித்துள்ள ஸ்ருதிஹாசன் , 'அவர் என்னுடைய நண்பர் மட்டும் தான்' என கூறியுள்ளார்.

எனினும் காதலர் தினத்தை இருவரும் ஒன்றாக கொண்டாடியுள்ளதால் , இது வெறும் நட்பு மட்டுமல்ல என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க படுகிறது.