Lokesh kanagaraj : தயவு செஞ்சு ‘இந்த’ படம் பார்த்துட்டு விக்ரம் பார்க்க வாங்க- சஸ்பென்ஸை உடைத்த லோகேஷ் கனகராஜ்

Lokesh kanagaraj : விக்ரம் திரைப்படம் ரசிகர்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Lokesh kanagaraj request fans to watch kaithi before watching vikram movie

மாநகரம், கைதி, மாஸ்டர் என வரிசையாக 3 ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்துள்ள இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி உள்ளது.

இப்படத்தின் ரிலீஸை ஒட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதிலிருந்தே "உலகநாயகன்" ரசிகனாகவே இருந்திருக்கிறேன், இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன், இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது.

Lokesh kanagaraj request fans to watch kaithi before watching vikram movie

இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத் துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விக்ரம் பட வேலைகளைத் தொடங்கிப் பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. ரத்தமும் வியர்வையும் சிந்தி (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை, “உலகநாயகன்" கமல்ஹாசனைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம்.

வாய்ப்புக்கு நன்றி சார், இந்தத் திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது! இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்! விக்ரம் திரைப்படம் உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்! "கைதி"யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு “விக்ரம்" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... Vikram FDFS : ரிலீசானது விக்ரம்... தியேட்டர்களில் அதகளப்படுத்தும் ஆண்டவர் ஃபேன்ஸ் - களைகட்டிய விக்ரம் FDFS

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios