*    ’மண்டி’ ஆன்லைன் ஆப்! விஷயத்தில் தனக்கு எதிரான வர்த்தகர்களின் போராட்டத்தின் மூலம் தனக்கு நெகட்டீவானாலும், பப்ளிசிட்டி கிடைக்குமென விஜய்சேதுபதி பெரிதாய் எதிர்பார்த்தார். ஆனால் அப்படியில்லை. சினிமாத்துறையின் சீனியர் மற்றும் பொறுப்பான ஆளுமைகள் பலர் அவருக்கு அட்வைஸ் செய்ய துவங்கியுள்ளனர். 
(எய்யா தர்மா என்னத்துக்குப்பே இப்படில்லாம் பண்ற?)

*    பிகில்  பணாலாகி கிடக்க, விஜய்யின் புதிய பட இயக்குநரான லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் அத்துக்கிட்டு போகுது பாக்ஸ் ஆபீஸில்! இந்நிலையில் லோகேஷின் ரசிகர்கள்  விஜய்யின்  சமீபத்திய புகைப்படங்களை லைட்டாக ஜிம்மிக்ஸ் செய்து புதிய கெட் அப்களை உருவாக்கி, அவற்றை புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போல் பரவவிட்டு வைரலாக்கி வருகின்றனர். 
(பேசாம இவனுங்களையே ஒரு படத்தை டைரக்ட் பண்ண சொல்லலாம்)

*    சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு வெற்றிப் படத்தை எதிர்பார்த்தார் சூர்யா, ஆனால் சிவாவோ அதற்கு முன் ரஜினி படத்தை முடிச்சுட்டு வந்துடுறேன் என்று அங்கே ஓடிட்டார். இந்தப் படத்தில் ரஜினியின் பிரதான ஹீரோயின் ஜோதிகாவாம். இதில் ஜோவுக்கு சந்தோஷம், சூர்யாவுக்கோ கடுப்பு கலந்த வருத்தம். 
(நம்ம சூர்யா நிலம இப்படி ஆகிடுச்சே கொமாரு)

*    அசுரன் தந்த ஆல் லெவல் ஹிட்டினால் தனுஷ் வகையறா செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. இந்த சூட்டோடு நீண்டநாள் கிடப்பில் கிடந்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தையும் வியாபாரம் செய்துவிட்டனர் ஜம்முன்னு. எல்லாம் பாஸிடீவாக நடக்கும் கெத்தில்,  தன் மாமனார் ரஜினியோடு மோதிட தயாராகிவிட்டார் தனுஷ். ஆம் பொங்கலுக்கு தர்பாரும், பட்டாஸும் மோதுகின்றன. 
(வயசானாலும் ஸ்டைலும், ஹிட்டும் அவரை விட்டு போகல. மண்டபத்ரம் சிதம்பரம்)

*    நம்ம வீட்டுப் பிள்ளை! படம் அம்பூட்டு ஹிட்டில்லை என்றாலும், ஏதோ சிவகார்த்தியை பார்டரில் பாஸ் பண்ண வைத்துள்ளது. ஆனாலும் மித்ரன் மற்றும் ரவிக்குமாரின் படங்களுக்காக உடம்பை ஏற்றி தன் ‘ஜாலி பையன்’ லுக்கை சிவகார்த்தி இழந்துவிட்டார்! என்று அவரது நண்பர் குலாமே கவலை தெரிவிக்கிறது. 
(இன்னாய்யா போஸ் பாண்டி, இப்படியெல்லாம் கெளப்புறாய்ங்க)