லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "மாஸ்டர்". இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், லாக் டவுன் நேரத்தில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் கொடுத்த தளர்வு காரணமாக, தற்போது அணைத்து பணிகளும் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால், இரண்டு நடிகர்களின் சூப்பர் காம்போவை பார்க்க,  இருதரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் "மாஸ்டர்" திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் "மாஸ்டர்" திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் கொரோனா பிரச்சனை விடாப்பிடியாக பரவி வருவதால், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது இந்த படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில். இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டதாகவும், படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த மாஸ் அப்டேட் ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இயக்குனர் பார்த்தாச்சு... எப்போ தளபதியோட படத்தை நாங்கள் பார்ப்போம் என்பது தான் ரசிகர்களின் கேள்வி? இதற்க்கு விரைவில் விடை கிடைக்கும் என்பதை நம்புவோம்.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா,  '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும் ', சாந்தனு, தீனா, சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், பிரேம் குமார், கைதி வில்லன் அர்ஜுன் தாஸ் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.