தான் வில்லனாகவும், தம்பி நல்லவனாகவும் ஒரு படத்திலாவது தோன்ற வேண்டும் என சூர்யா பேசிய முந்தைய வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்சன் நாயகனாக வலம் வந்த சூர்யாவிற்கு அவர் நாயகனாக வந்த சூர்யாவின் இமேசை ஒரே படத்தில் மாறிவிட்டது. மற்ற படங்களை காட்டிலும் விக்ரம் சூர்யாவிற்கு தனி பெயரையும் முன்பை விட அதிக ரசிகர் பட்டாளத்தையும் பெற்று விட்டது. வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே திரையில் காட்சியளித்தாலும் ரோல்க்ஸ் ரோலில் வரும் சூர்யா தன ரசிகர்களை மட்டுமல்லாமல் பலரையும் வசீகரித்து விட்டார். இவரின் வரவு விக்ரம் 2விற்கான ஆர்வத்தை தூண்டி விட்டது. தாடியுடன் இவரின் மாஸ் கெட்டப் கண்களில் பதியும் வண்ணம் அமைந்து விட்டது.

முன்னதாக படத்தில் தனது ரோல் மற்றும் ரசிகர்களின் அன்பு குறித்து பகிர்ந்த சூர்யா, '“அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் நடித்தது கனவு நனவானது போல் இருந்தது. இதை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி லோகேஷ் கனகராஜ். ரோலெக்ஸுக்கு கிடைக்கும் அன்பை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது” என குறிப்பிட்டிருந்தார். 

கடந்த வெள்ளி கிழமை வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது. விக்ரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் 2, இரும்பு கை மாயாவி மற்றும் இன்னுமொருபடம் உள்ளிட்ட 3 திட்டங்களில் இனிவாரென தெரிகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்திக்கின் கைதியை வித்யாசமான கோணத்தில் ரசிங்கர்களுக்கு கொடுத்து ஹிட் அடித்தவர். 

இந்நிலையில் சூர்யாவின் பழைய இன்டர்வ்யூ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. வீட்டில் தான் அமைதியாகவும், தம்பி கார்த்தி சேட்டை செய்வார். எனவே படத்திலாவது, தான் சைலன்ட் வில்லனாகவும், கார்த்தி பட்டை போட்ட முழு நேர நல்லவனாக இருக்கவேண்டும். ஒரு படமாவது அப்படி நடிக்கவேண்டும் என கூறுகிறார். அவரின் ஆசைப்படியே கைதி படத்தில் கார்த்தியை பட்டைபோட்ட நல்லவனாக காட்டிய லோகேஷ் விக்ரமில் சூர்யாவை வர லெவலில் சித்தரித்துள்ளார். 

View post on Instagram