தளபதி 64 நான்காவது படத்தை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயக்கி வரும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு, கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவோடு பல திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வசூலில் 'பிகில்' படத்தை விட குறைவாக இருந்தாலும் பார்வையாளர்களின் தொடந்து நல்ல விமர்சனங்களை மட்டுமே இப்படம் பெற்று வருகிறது.

இந்நிலையில் 'கைதி' படம் வெற்றிகரமாக 25 ஆவது நாளை எட்டி உள்ள நிலையில், இதற்க்கு நன்றி சொல்லும் விதமாக, "கைதி வெற்றிகரமாக 25வது நாள் இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும் , ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும்  நன்றி என ட்விட் போட்டு... 
அப்படியே அந்த கொசு  மருந்து அடிச்ச  மிஷினுக்கும் ஒரு குட்டி  நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டை கமெண்ட் செய்யும் விதமாக, இயக்குனர் ரத்னகுமார். அப்டியே தளபதி 64 படத்தின் கிளைமேக்ஸில் என்ன வெப்பன் வர போகுது னு சொன்னீங்க னா நல்லா இருக்கும், என கிண்டலாக கேட்டுள்ளார். இதற்கு, லோகேஷ் கனகராஜ் என்ன பதில் சொல்வார் என்று பொறுத்திருந்து பாப்போம்.