ஒவ்வொரு வருடமும் வெளியாகும் திரைப்படங்களில் எந்த திரைப்படம் வசூல் சாதனையில் டாப் 10 இடங்களை பிடிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்நிலையில் நாமக்கல்லில், அமைந்துள்ள எல்.எம்.ஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்று,  இதுவரை அந்த திரையரங்கில் ஒளிபரப்பட்ட திரைப்படங்களில் அதிக வசூல் செய்த, டாப் 10 இடங்களை பிடித்து வசூல் சாதனை செய்த, படங்களின் தொகுப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இதில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. 'பாகுபலி' இரண்டாவது இடத்தையும், 'எந்திரன்' திரைப்படம் மூன்றாவது இடத்தையும், 'மெர்சல்' நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. அஜித்தின் 'வேதாளம்' ஐந்தாவது இடத்திலும், 'சிங்கம்' ஆறாவது இடத்திலும், 'விஸ்வரூபம்' ஏழாவது  இடத்திலும் உள்ளது.

மேலும் 'வருத்தப்படாதவாலிபர் சங்கம்' எட்டாவது இடத்திலும், 'மாரி' திரைப்படம் ஒன்பதாவது இடத்திலும், காஞ்சனா பத்தாவது இடத்திலும் உள்ளது. 

அஜித் நடித்த 'விஸ்வாசம்', பிரமாண்ட படமான 'பாகுபலி' படத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளதை, அஜீத்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் எதுக்கெடுத்தாலும், ட்விட்டரில் மோதிக்கொள்ளும்,  விஜய் - அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் மேலும் புகைச்சலை கிளப்பியுள்ளது.

விஜயின் மெர்சல் திரைப்படம் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருந்தாலும், இந்த வருடம் வெளியாகி வசூல் சாதனை செய்ததாக கூறப்பட்ட 'பிகில்' திரைப்படம் இந்த லிஸ்டில் இடம்பெறாதது, விஜய் ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது. 

 எல்.எம்.ஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் வெளியிட்டுள்ள லிஸ்ட் இதோ: