நடிகரும், டாக்டரும் நடிகர் சந்தானத்தின் நண்பருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மூணு நாட்கள் முன் கொரோனா விழிப்புணர்வு வீடியோ போட்டவர்.. இப்ப இல்ல! இறப்பு இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம்.. வயது ஒரு பொருட்டல்ல!

அவர் கொரோனாவை பற்றி கடந்த மூன்று நாட்களுக்கு முன் இரண்டு வீடியோக்களை பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். மறைவதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோவை கேட்டு அதன்படி நடந்துகொள்ளுங்கள் வாசகர்களே...