இயக்குனர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். 

இயக்குனர் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக 'சண்டக்கோழி 2 ' படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து படம் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படம் குறித்து ஏற்கனவே நடிகர் ராம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்யும் விதமாக, லிங்குசாமியை வேற லெவலில் புகழ்ந்து தள்ளினார்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து துவக்கி வைத்தார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு அன்பறிவ் என்பவர் சண்டை பயிற்சியாளராக உள்ளார். பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.