மூன்று தினங்களுக்கு முன்பு, ஜெயலலிதாவின் கதையை எங்கள் இயக்குநர் லிங்குசாமி இயக்குவார். அதில் சசிகலா, நடராஜன் பாத்திரங்கள் முக்கியத்துவம் பெறும் என்று ஜெயானந்த் திவாகரன் அறிவித்ததை ஒட்டி, அதில் ஜெயலலிதா நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்பது துவங்கி ஏகப்பட்ட யூகச்செய்திகள் நடமாடின.

ஆனால் இந்த நிமிடம் வரை அச்செய்திக்கு எந்த ஒரு ரியாக்‌ஷனும் தராமல் ஒரு வகையான கள்ள மவுனம் காத்துவருகிறார் லிங்கு. இதுகுறித்து அவரிடமிருந்து ஒழுங்காய் சம்பளம் வராத அவரது உதவியாளர்கள் வட்டாரத்தில் விசார்த்தபோது,  வந்த தகவல் உண்மைதான். ஆனால் அரசியலில் தினகரன் கை ஓங்கும்வரை இதை வெளியே அறிவித்து யாருடைய  பகையையும் லிங்கு சார் பங்கு போட்டுக்கொள்ளவிரும்பவில்லை என்கிறார்கள்.

வெளியே பகட்டாக காணப்படும் லிங்கு சிலபல ஆண்டுகளாகவே பெரும் கடனாளியாகத்தான் காலம் கழிக்கிறார். மதுரை அன்பு உட்பட்டோருக்கு மாதாமாதம் அவர் கட்டும் வட்டியில் ஒவ்வொரு மாதமும் ஒரு சின்ன பட்ஜெட் படமே எடுத்துவிடமுடியுமாம்.

வாராது வந்த மாmoneyபோல் வந்த இந்த புராஜக்டின் ரிஸ்க்கையும் மீறி லிங்கு இதை ஒத்துக்கொண்டதே தனது பெருங்கடனை அடைக்கத்தானாம். ‘சார் கைக்கு பொட்டி வந்துருச்சின்னு எங்களுக்குத் தெரியும். ஆனா அது வந்து சேர்ந்ததுக்கான ஆனந்தம் அவர் முகத்துல தென்படவே இல்லை’ என்கிறார்கள் திருப்பதி பிரதர்ஸின் ஒன்றுவிட்ட பிரதர்ஸ்.