Asianet News TamilAsianet News Tamil

'சிங்காரவேலன்' படத்தின் ஹீரோ யார்? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் லிங்குசாமி!

அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

lingu samy movie next hero tomorrow announce
Author
Chennai, First Published Sep 12, 2018, 7:35 PM IST

அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை' , 'பூலோகம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு - கோபிகிருஷ்ணா. 

'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். 

பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்படும் என ஏற்கனேவே அறிவித்திருந்தார்கள். 

அதன்படி இயக்குனர்/தயாரிப்பாளர் லிங்குசாமி  நாளை காலை 11 மணிக்கு படத்தின் கதாநாயகன் யார் என்பதையும் படத்தின் பெயரையும் அறிவிக்கிறார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios