Asianet News TamilAsianet News Tamil

சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக்குழு!

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்து, 'எல். ஜி. எம்' பட குழுவினர் மைதானத்திலேயே கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

LGM movie team celebrate csk success in cricket stadium
Author
First Published Apr 4, 2023, 8:58 PM IST

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியை நேரடியாகக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் 'எல். ஜி. எம்' பட குழுவினர், இந்த போட்டியை காண வருகை தந்தனர். 

தோனியின் சாதுரியமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை வெற்றி பெற செய்த தருணத்தை நேரில் கண்டு ரசித்த படக்குழுவினர், தோனியின் மாயாஜால வித்தையை மெய் மறந்து ரசித்து பாராட்டி சந்தோஷத்தில் துள்ளி குதித்து இந்த வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்!

LGM movie team celebrate csk success in cricket stadium

எம். எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தனது முதல் தமிழ் திரைப்படமாக 'எல். ஜி. எம்'  எனும் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது.  இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். அவரே இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'பிரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் புதிய பட ஆடிஷனுக்கு ரோட்டில் வரிசை கட்டி நிற்கும் இளைஞர்கள் !

LGM movie team celebrate csk success in cricket stadium

இதனிடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரில் கண்டு ரசித்த 'எல். ஜி. எம்' பட குழுவினருடன் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் வணிக பிரிவின் தலைவரான விகாஸ் ஹசிஜா மற்றும் கற்பனை திறன்மிகு படைப்பின் தலைவரான பிரியான்சு சோப்ரா ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் இவர்கள் எடுத்து கொண்ட புகைப்படமும் தற்போது, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios