Let see the hand This can be done in the aruvi movie teaser ...

புதுமையான கதைக் களத்தில் உருவாகி வரும் ‘அருவி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருவி’.

பெண்களை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் புதுமுக நாயகி பிந்து மாலினி புகைப்பிடிப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பைக் கூட்டியது.

அடுத்து இந்தப்படத்தின் மற்றொரு போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் ஒரு பெண் பாரத மாத வடிவில் இருப்பது போல இருந்தது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதன் டீஸர் கதாநாயகியை மையமாக கொண்டும், நீ எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவள் என்று தொடங்குமாறு ஆரம்பிக்கிறது. அதற்கூ ஹீரோயின் சிரித்துக்கொண்டே பதிலளிக்கும் விதம் கெத்தாக இருக்கும்.

இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், முகமது அலி பைக், கவிதா பாரதி, லட்சுமி கோபால்சாமி, பிரதீப் அந்தோனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.