Asianet News TamilAsianet News Tamil

கோவில்பட்டியில் லியோ படத்தின் ஒரு டிக்கெட் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை; காரணம் தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க!

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் அப்படத்திற்கான டிக்கெட்டை ரூ.1 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். 

Leo movie single ticket sold for 1 lakh rupees in kovilpatti gan
Author
First Published Oct 19, 2023, 1:30 PM IST | Last Updated Oct 19, 2023, 1:52 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

ஏற்கனவே லியோ படத்தின் அப்டேட்கள், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் இப்படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்காததால், அதற்காக நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பு தரப்பின் முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், லியோ திரைப்படம் இன்று தமிழகத்தில் காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆனது. இதற்கு முன்னதாகவே தியேட்டர் முன் குவிந்த விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்க தியேட்டர் முன் ஆடிப்பாடியும் லியோ படத்தை கொண்டாடினர். அதுமட்டுமின்றி லியோ படம் வெளியாவதையொட்டி ரசிகர்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் இன்று காலை முதல் காட்சி ரசிகர்கள் ஷேவாக  திரையிடப்பட்டுள்ளது. இந்த காட்சியின் முதல் டிக்கெட்டை கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் சுந்தர் என்பவர் 1 லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வாங்கியுள்ளார். நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் வகையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார் 

இதையும் படியுங்கள்... அப்பா, அம்மா இல்லாத எனக்கு விஜய் தான் எல்லாமே... லியோ FDFS-வில் காதலியை கரம்பிடித்த விஜய் ரசிகர் நெகிழ்ச்சி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios