போலீசார் குவிப்பு... லியோ FDFS ரத்து! ரோகிணி தியேட்டரில் கடும் கட்டுப்பாடு - காரணம் என்ன?

சென்னையில் உள்ள புகழ்பெற்ற திரையரங்கமான ரோகிணி தியேட்டரில் லியோ படத்தின் 9 மணிக்காட்சி திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leo Movie 9Am FDFS cancelled in chennai koyambedu rohini theatre gan

சென்னையில் உள்ள புகழ்பெற்ற திரையரங்குகளில் ரோகிணி தியேட்டரும் ஒன்று. ரசிகர்களின் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த தியேட்டரில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது நடந்த சம்பவத்தால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.

லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன போது, ரசிகர்கள் அங்குள்ள இருக்கைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் திரையரங்க நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக இருக்கைகளுடன் லியோ முதல் காட்சிக்கு ரோகிணி தியேட்டர் தயாராகிவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Leo Movie 9Am FDFS cancelled in chennai koyambedu rohini theatre gan

வழக்கமாக ரோகிணி தியேட்டரில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் இம்முறை அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த லியோ படத்தின் முதல் காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதற்கு பதிலாக முதல் காட்சியை காலை 11.30 மணிக்கு திரையிட உள்ளதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி கொண்டாட்டங்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளதால் ரோகிணி திரையரங்கம் களையிழந்து காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Leo Review : விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி சம்பவம் செய்ததா? சலிப்படைய வைத்ததா? - லியோ விமர்சனம் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios