அபரிமிதமான ரசிகர்களை கொண்ட சக்திமான் தொடர் தற்போது திரைப்படமாக தயாராக உள்ளது. இப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. 

சிறு வயதில் தூர்தர்ஷனில் பார்த்து ரசித்த சில சின்னத்திரை தொடர்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த வகையில் 90ஸ் கிட்ஸின் பேவரைட் சூப்பர் ஹீரோவாக இருந்தது சக்திமான் தான். இந்த தொடரை தயாரித்து நடித்தவர், பிரபல இந்தி நடிகர் முகேஷ் கண்ணா. 1997 முதல் 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடரை பார்க்க ஞாயிற்றுகிழமைகளில் டிவி முன் தவறாமல் அட்டன்டென்ஸ் போட்டு விடுவார்கள், இப்போது நடுத்தர வயதில் இருக்கும் அப்போதைய குட்டீஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சக்திமான் தொடருக்கு ரசிகர்களிடையே இன்றளவும் மவுசு குறைந்தபாடில்லை. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்து நிறுத்தப்பட்டன. அப்போது தொலைக்காட்சியில் சக்திமான் தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. மறு ஒளிபரப்பிலும் டி.ஆர்.பி.யில் கெத்து காட்டியது சக்திமான் தொடர்.

அபரிமிதமான ரசிகர்களை கொண்ட இந்த தொடர் தற்போது திரைப்படமாக தயாராக உள்ளது. இப்படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இது குறித்த அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியாவின் பல அபிமான தொடர்கள் திரைப்படமாக்கப்பட்டு உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. 

அந்த வரிசையில் நடிகர் முகேஷ் கண்ணாவின் சக்திமான் தொடர், தற்போது திரைப்படமாக உருவாகவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் பிரபலமான சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் அவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

YouTube video player