இர்ஃபான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட் என பாலிவுட்டில் அடுத்தடுத்து தொடரும் மரணங்களால் பிரபலங்களும், ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் பாலிவுட்டின் மற்றொரு முக்கிய நடிகரின் திடீர் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஷோலே திரைப்படம் மூலம் இந்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜகதீப். இந்த படத்தில் சூர்மா போபாலி என்ற காமெடி கேரக்டரில் ஜகதீப்  நடித்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது 81 வயதாகும் ஜகதீப் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திக்கி திக்கி பேசும் பாணியால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். 

 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

வயது மூப்பின் காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் ஜகதீப் தனது இல்லத்திலேயே காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகர் ஜகதீப்பிற்கு 3 மகன்கள், 3 பெண்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகனான ஜாவேத் ஜாப்ரி பிரபல காமெடி நடிகராக உள்ளார், மற்றொரு மகன் நவீத் ஜாப்ரி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். ஜகதீப் 3 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபல காமெடி நடிகரான ஜகதீப்பின் மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.