Asianet News TamilAsianet News Tamil

எனது கற்பை சூறையாடியிருக்கிறார் லீனா மணிமேகலை’ கொந்தளிக்கும் இயக்குநர் சுசி கணேசன்!!

MeToo’ விவகாரத்தில் தன் பெயரை இழுத்துவிட்ட குறுங்கத்தியுடன் அலையும் குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு இயக்குநர் சுசி கணேசன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leena manimekalai...harassment director susi ganesan metoo
Author
Chennai, First Published Oct 16, 2018, 9:25 AM IST

MeToo’ விவகாரத்தில் தன் பெயரை இழுத்துவிட்ட குறுங்கத்தியுடன் அலையும் குறும்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு இயக்குநர் சுசி கணேசன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். லீனாவிம் மீது மான நஷ்ட வழக்கு தொடரவிருப்பதாகவும், இந்த விவகாரத்தை அவ்வளவு லேசில் விடுவதாயில்லை என்றும் சூளுரைத்திருக்கிறார் சுசி கணேசன். Leena manimekalai...harassment director susi ganesan metoo

லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி , வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள்.

இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நிருபித்துவிட்டீர்கள்....உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலேயே , ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள் , கத்தியை அந்த அப்பாவி( ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர். Leena manimekalai...harassment director susi ganesan metoo

அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன்- என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை , உன்னைப் போன்ற .metoo-இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் " சமுதாய வைரஸ்களை" களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை. Social media நண்பர்களுக்கு-தயவு செய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம்கண்டு தவிருங்கள். Leena manimekalai...harassment director susi ganesan metoo

லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில் , சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம் , வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்’ என்று வேண்டுகோள் வைக்கிறார் சுசி கணேசன்.

Follow Us:
Download App:
  • android
  • ios