Asianet News TamilAsianet News Tamil

இனியாவது ஹோம் வொர்க் பண்ணிட்டு வாங்க... நிருபர்களை வெளுத்த லீனா மணிமேகலை!

நீதிமன்றத்தில் நிற்கவைத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மனநிலைக்கு என்னை ஆளாக்க வேண்டாம் என்றும் நிருபர்கள் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணிக்கொண்டு வருமாரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது லீனா மணிமேகலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leena Manimagalai press meet
Author
Chennai, First Published Oct 20, 2018, 3:47 PM IST

நீதிமன்றத்தில் நிற்கவைத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மனநிலைக்கு என்னை ஆளாக்க வேண்டாம் என்றும் நிருபர்கள் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணிக்கொண்டு வருமாரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது லீனா மணிமேகலை வேண்டுகோள் விடுத்துள்ளார். எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, பாடகி சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன், சின்மயி, ஸ்ரீரஞ்சனி, 
ஆவணப்பட இயக்குநர் மாலினி ஜீவரத்தினம் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். Leena Manimagalai press meet

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது இயக்குநர் லீனா மணிமேகலை, 
இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.  இதன் பின்னர், இயக்குநர் லீனா மணிமேகலை செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது: மீடூ போன்ற இயக்கங்கள் மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறுவதோடு அல்லாமல், அதுபோன்ற குற்றங்கள் கவனிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். Leena Manimagalai press meet

பெண்களின் பிரச்சனைகள் கவனிக்கப்படுவதோடு அல்லாமல், தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் இதுபோன்ற விவகாரங்களை பொதுவெளிக்குள் கொண்டுவரும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். எனது குற்றச்சாட்டுகள் குறித்து பேஸ்புக்-ல் போய் படித்துக் கொள்ளுங்கள் என்று லீனா மணிமேகலை கூறினார். அவரது இந்த பதிலால் அப்போது சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பேசிய லீனா மணிமேகலை, நீதிமன்றத்தில் நிற்கவைத்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மனநிலைக்கு என்னை ஆளாக்க வேண்டாம் என்றும் நிருபர்கள் கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணிக்கொண்டு வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். Leena Manimagalai press meet

 பாலியல் தொடர்பான புகார்களுக்காகவே மீடூ போன்ற தளங்கள் இருப்பதாகவும், அவற்றை முறைப்படுத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளையும் அடுத்து யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையையும் எடுக்க வேண்டுமென்றும் கூறினார். பெண்கள் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு துணிந்து வந்து அவற்றை சொல்லும் பெண்களே, ஆதாரம் என்பதுதான் மீ டூ ஃபோரமின் அடிப்படை. இதன் மூலம் மாற்றம் உருவானால் அதுவே உண்மையான சமூக மாற்றம் என்று லீனா மணிமேகலை கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios