learn from your younger generation Karnataka activist advised super star
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம், வரும் ஜீன் 7 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரையிடப்பட இருக்கிறது. காலா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதால் அது தொடர்பான பிரம்மோஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறது காலா படக்குழு.
காலா படம் கர்நாடகாவிலும் திரையிட திட்டமிடப்பட்டு இருந்தது. இப்போது அதற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கால திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீசாக விடமாட்டோம். என வட்டாள் நாகராஜன் இப்போது சவால் விடுத்திருக்கிறார். இவர் காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்துவருபவர்.
இதே போன்ற பிரச்சனையை முன்னர் பாகுபலி-2 திரைப்படமும் சந்தித்தது. அப்போது சத்யராஜை மன்னிப்பு கோரும்படி கூறியவரும் இந்த நாகராஜ் தான். இப்போது இவர் ரஜினியை எதிர்க்க காரணம் காவிரி தொடர்பான பிரச்சனையில், ரஜினி சமீபத்தில் தெரிவித்த கருத்து தான் என கூறியிருக்கிறார்.
காவிரி பிரச்சனையில் இது நாள் வரை நடுநிலை காத்த ரஜினி, இப்போது அரசியலுக்கு வந்த பிறகு தமிழர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருக்கின்றார் வட்டாள் நாகராஜ். மேலும் அவர் சிம்பு செய்த செயலை பார்த்தாவது நீங்கள் எல்லாம், எப்படி நடந்துகொள்வது என கற்றுக்கொள்ளுங்கள். எனவும் கூறியிருக்கிறார்.
