இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நாயகிகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த வாய்ப்பு அனுஷ்காவிற்கு சென்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

 ஏற்கனவே இவர்கள் இருவரும் வேட்டைக்காரன் படத்தில் ஜோடி நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனால், அட்லீ தான் இயக்கும் அடுத்த படத்திற்கு அனுஷ்காவை தான் கேட்டுள்ளார்.

ஆனால், பாகுபலி-2 முடியும் வரை எந்த படத்திலும் நடிப்பதாக இல்லை என்று கூறி மறுத்துவிட்டாராம்.

ஏன் என்று விசாரிக்கையில் படத்தில் இரண்டு ஹீரோயின்னாம் , இவர் மட்டுமின்றி நயன்தாராவும் இதில் நடிக்கின்றார்.

இதனால் தன் கதாபாத்திரத்தின் பலம் குறைந்துவிடுமோ என்று எண்ணி மறுத்துவிட்டாராம், தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க காஜலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.