laxmi menon slim suspence
நடிகை லட்சுமி மேனன் முதல் படமான கும்கி படத்திலேயே ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர். வட்ட முகம், குடும்பப் பாங்கான தோற்றத்துடன் இவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தால் இவருக்கு தொடர்ந்து புடவை, தாவணி என போட்டு நடிக்கும் கதாபாத்திரம் தான் அதிகமாகக் கிடைத்ததே தவிர, மாடர்ன் பெண்ணாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்துப் படங்களிலும் தோல்வியை சந்திக்காமல், மிதமான வெற்றி பெற்றதால் இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தன.

இவர் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த றெக்க படம் வெளியானது. இந்தப் படத்தில் இவர் மிகவும் குண்டாகத் தெரிந்ததால். இவரிடம் கதை சொன்ன இயக்குனர்கள் பலர் கொஞ்சம் உடம்பைக் குறைக்கக் கூறி அட்வைஸ் செய்துவிட்டு சென்றதாகக் கூட செய்திகள் வெளியாகின.
தற்போது லட்சுமி மேனன் கைவசம் பிரபுதேவாவுடன் நடித்து வரும், 'யங் மங் சங்' படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மாக மாறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
![]()
இப்படி ஸ்லிம் ஆனதற்கு என்ன காரணம் என அவரே வெளியிட்டுள்ளார். தினமும் தன்னால் முடிந்த வரை முழு எனர்ஜியோடு டான்ஸ் ஆடுவேன்...ஆனால், நான் இதுவரை ஒரு நாள்கூட ஒர்கவுட் செய்ததில்லை என கூறியுள்ளார்.
