lawrnce open temple for her mother

தமிழ் சினிமாவில், நடன இயக்குனராக அறிமுகம் கொடுத்து, இன்று நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன்னுடைய திறமையால் உயர்ந்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சினிமாவில் ஒரு பக்கம் சாதனைகள் செய்தாலும், மற்றொரு பக்கம் தன்னுடைய அறக்கட்டளை மூலம், பல குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய அம்மா கண்மணிக்காக ஒரு கோவிலையும் கட்டிவந்தார். இந்த கோவிலை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் திறந்து வைத்தார்.

ராகவா லாரன்ஸ் கஷ்டப்பட்ட தினங்களில் அவருக்கு உதவி கரம் நீட்டியவாறு இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில், வயது மூத்த தாய் மார்கள் ஆயிரம் பேருக்கு சேலைகளும், ஆறு விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு தாலியையும் லாரன்ஸ் தாயார் கண்மணி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இன்றிலிருந்து 48 நாள் கழித்து சிறப்பு விழா ஒன்றை லாரன்ஸ் நடத்த உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் இன்னும் பல சினிமா பிரபலங்கள் காலத்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.