குழந்தை நட்சத்திரமாக ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் நடிகர் டிங்கு. இவருக்கு வெள்ளித்திரையில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டிங்கு அவருடைய நண்பர் ராபர்ட்டும் இணைந்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர். அந்த படத்திற்கு இசையமைக்க நடிகை ஜெயசித்தரவின் மகன் அமிரிஷை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளனர்.
அமிரிஷ் அந்த படத்தை தயாரிக்கவும் சம்மதித்துள்ளார். இதன் பிறகு அமிரிஷிற்கு மொட்டை சிவா கெட்ட சிவா படத்தில் இசையமைக்கும் பணி கிடைத்துள்ளது.
டிங்குவின் படத்தில் போட்ட அனைத்து டியுனையும் லாரன்ஸ் படத்திற்கு கொடுத்துள்ளார், இதை அறிந்த டிங்கு அமிரிஷையும், லாரன்ஸையும் கடுமையாக சாடியுள்ளார். இதுமட்டுமின்றி தன்னை ஏமாற்றிவிட்டதாக கண்ணீர் விட்டு அழுத்த அவருடைய வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
