நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் திரையுலகை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு, ஏமாற்றிவிட்டார்கள் என புகார்களை அடுக்கினார்.

இதுவரை இவரின் புகாருக்கு சம்மந்தப்பட்ட நடிகர், மற்றும் இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இவர்..."ஸ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக சில விளக்கம் அளிக்க நினைக்கிறேன். ஸ்ரீரெட்டி என் மீது குற்றம் சாட்டியுள்ளது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை. இதற்காக நான் கவலைப்படவும் இல்லை. இந்த சம்பவம் குறித்து நண்பர்கள் மற்றும் என் நலம் விரும்பிகள் தொடர்ந்து, விளக்கம் கேட்டு வருவதால், ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை பற்றி பேசவுள்ளேன்.

கடந்த ஏழு வருடத்திற்கு முன்பு வெளியான 'ரெபல்' படத்தின் படப்பிடிப்பின் போது என்னை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். அப்போதே இது பற்றி பேசாமல் ஏன் இப்போது இது பற்றி பேசுகிறார். 

சரி இதை விட்டுவிடலாம். நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்தி கொண்டேன் என்றும் என் அறையில், சாமி படங்களும், ருத்ராட்ச மாலையும் இருந்ததாக கூறியுள்ளார். நான் தங்கும் இடத்திற்கு எல்லாம் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்ய நான் அறிவு இல்லாதவனா என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பின், உண்மையில் ஸ்ரீரெட்டியின் நிலையை பார்த்தல் தனக்கு பரிதாபமாக உள்ளதாகவும், அவருக்கு நான் வாய்ப்பு கொடுக்க தயாராக உள்ளதாகவும், அதற்கு அவர் தன்னுடைய சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இதுவரை எனக்கு அவரை சந்திக்க தைரியம் இல்லை என்று கூறி வந்தார் ஸ்ரீரெட்டி, கண்டிப்பாக நேரில் சந்திக்கிறேன் . அனைத்து ஊடகத்தினர் முன்பு நான் ஒரு சீனும், சில எளிமையான நடன காட்சிகளும் தருகிறேன். அதை மட்டும் ஸ்ரீரெட்டி நடித்து காட்டிவிட்டால், உண்மையில் அது நன்றாக இருந்தால் என்னுடைய அடுத்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஒருவேலை அனைவர் மத்தியிலும் அவருக்கு நடித்துக்காட்ட தயக்கம் இருந்தால், எனது மேலாளரை தொடர்பு கொண்டு, அவருடைய வழக்கறிஞர் மற்றும் நலம் விரும்பிகள் முன்னிலையில் நடித்து காட்டினால் கூட போதும், நான் அவருக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 

மேலும் பெண்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு எனவும், தன்னுடைய தாய்க்கு கோயில் கட்டி வழிபட்டு வருபவன் நான்... எனவே ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை நல்லபடியாக அமைய கடவுளை வேண்டிகொள்வதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.