நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக சேவகர் கணேசன் கஜா புயலில் தாக்கத்தால், தன்னுடைய வீட்டை இழந்தார். 
தற்போது இவருக்கு, ரூ.10 லட்ச ரூபாய் செலவில், வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

 நடிகர் ராகவா லாரன்ஸ் பேய் கதையை மையமாக வைத்து முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, பல பல பாகங்களை இயக்கி வெற்றியை கொடுத்து வருகிறார்.  குறிப்பாக இவருடைய படங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து இருப்பதால், மூன்றாவது பாகம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் 100 கோடியை மிஞ்சியுள்ளது.

பல திரையரங்கங்களில் காஞ்சனா 3 தற்போது வரை பல திரையரங்கல்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் 'தாய்' என்கிற அமைப்பையும் துவங்கியுள்ளார்.  இதன் மூலம் பிள்ளைகளால் தெருக்களிலும் பஸ் ஸ்டாண்ட் களிலும் ஆதரவின்றி விடப்படும் பெற்றோர்களை பாதுகாக்கக இந்த அமைப்பை துவங்கி உள்ளார்.

இதை தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் கணேசனுக்கு ரூ .10 லட்ச ரூபாய் செலவில், புதிய வீடு ஒன்றையும் கட்டிக் கொடுத்து அதன் பிரதேசத்தில் அவரே நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. பலர் ராகவா லாரன்சின்  இந்த செயலை நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகிறார்கள்.