lawrance release the song for rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவார் வருவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இன்று தான் அதற்கான விடை தெரியவந்துள்ளது.
ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பால் காலை முதல் ரஜினி ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ‘வா தலைவா போருக்கு வா' என்கிற பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் தற்போது ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு முறை ரஜினியின் பிறந்த நாளுக்கு ராகவா லாரன்ஸ் இதோ போன்ற ஒரு பாடலை வெளியிட்டார்.
தலைவா போருக்கு வா என அரசியலுக்கு அழைத்த இவர், சூப்பர் ஸ்டார் கட்சியில் இணைந்து பணியாற்றுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
