பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான ஊர்வசி ரௌட்டலா, தற்போது தமிழில் பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடித்து வரும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் வீடியோ காலில் பேசிய வீடியோவை தற்போது ஊர்வசி ரௌட்டலா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சூப்பர் ஹீரோ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்குமோ... அதே போன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது லெஜெண்ட் சரவணன் நடித்து வரும், திரைப்படம். சுமார் 200 கோடி பட்ஜெட்டில்... மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை 'உல்லாசம்' பட இரட்டை இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விஞ்ஞானியாக லெஜெண்ட் சரவணன் நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரோபோ ஷங்கர், நடிகர் விவேக் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ஊர்வசி ரௌட்டலா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது... ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் நான் தமிழில் அறிமுகத்திற்கு வாழ்த்து கூறினார்கள் என்றும், லதா ரஜினிகாந்த் அவர்களிடம் பேசியது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ஒரு அறக்கட்டளை நடத்தி வரும் நிலையில், ஊர்வசி நடத்தி வரும் அறக்கட்டளையில் இணைந்து பணிபுரிய லதா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்ததாகவும் அதற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

View post on Instagram